தேனி மார்ச், 21
தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 38 பேர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பணி நீக்கத்தை தொடர இரண்டு முறை தடையானை பெறப்பட்ட பின்பும், பணியாளர்களை நிர்வாகம் பணிக்கு அழைக்கவில்லை.
மேலும் இது தொடர்பாக பொது மேலாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனக் கூறி தேனியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்கள் உள்பட 38 பேர் தற்போது தேனி பழனி செட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.