தேனி மார்ச், 20
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத் தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா நேரடியாக வருகைபுரிந்து மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் மேல சொக்கநாதபுரம் பகுதியினை சேர்ந்த ஈஸ்வரன், சின்னமனூர் பகுதியினை சேர்ந்த முத்துவேல், ஜீ.கல்லுப்பட்டியை சேர்ந்த அழகு லட்சுமி , தென்கரையினை சேர்ந்த அன்பரசன் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ 1,75000 மதிப்புள்ளான திருமண உதவித்தொகையினை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியின் போது தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உடனிருந்தனர்.