அரியலூர் மார்ச், 16
அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
அக்கல்லூரியின் முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு 39 யூனிட் ரத்ததானம் வழங்கினர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்தவங்கி மருத்துவக் குழுவினர் ரத்தானத்தை சேகரித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சத்யபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.