சென்னை மார்ச், 16
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 40 ஐ கடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும் முக கவசம் அணியுமாறும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மறுபுறம் H3N2 வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.