மும்பை மார்ச், 14
கடும் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை இன்று எழுச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்ந்து 58,296 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 17,161 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. டிசிஎல் லிமிடெட், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.