ஈரோடு பிப், 11
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை விட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது என்று வீரமணி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு கொடுப்பதாக காட்டிக் கொள்ளும் பாஜகவின் எண்ணம் பெரிய வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோற்க வேண்டும் என்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.