சென்னை பிப், 11
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜயுடன் நடிப்பது குறித்து பேசிய அர்ஜுன், லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. படத்தில் லோகேஷ் என்னை வித்தியாசமான ஆக்சன் தோற்றத்தில் காட்டப் போகிறார். மேலும் மிகப் பெரிய நடிகர் அவருடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும் என்றார்.