சென்னை பிப், 10
100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன் அறிவித்துள்ளார். விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ₹30,000 நிவாரணம் வழங்க வேண்டும் புதிய பயிர் காப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.