தென்னாப்பிரிக்கா பிப், 6
மகளிர்க்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பை அணி நிர்வாகம் தங்களின் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளராக சார்லஸ் எட்வார்ட்ஸ், ஆலோசகர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி, பேட்டிங் பயிற்சியாளராக தேவிகா பால்ஷிகார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.