இலங்கை பிப், 6
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் மீண்டும் சமையல் கேஸ் விலையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உயர்த்தி உள்ளது அதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை 334 ரூபாய் அதிகரித்து ரூ.4,743க்கு (அந்நாட்டு ரூபாய் மதிப்பில்) விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் ரூ.1,904 க்கும் 2.3 கிலோ காஸ் சிலிண்டர் ரூ.883 க்கும் விற்கப்படுகிறது.