மங்கோலியா பிப், 7
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் போப்பாண்டவர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக போப் ஜான் பால் 1999 ல் இந்தியா வருகை தந்தார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் வெளிநாட்டு பயணம் திட்டம் குறித்து வெளியான தகவலில் இந்த ஆண்டு செப்டம்பரில் பிரான்ஸ் செல்கிறார். அங்கிருந்து மங்கோலியா, போர்ச்சுகல் செல்ல உள்ளார். அடுத்த ஆண்டு இந்தியா வரை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.