துபாய் பிப், 4
நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது அரசு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க அந்த அரசு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். தான் கோல்டன் விசா வாங்கிய புகைப்படத்தை அருண் விஜய் சோசியல் மீடியாவில் பதிவிட அது வைரலாகியுள்ளது.