திருப்பூர் ஜன, 31
திருப்பூரில் தமிழக வீரர்களை விரட்டி அடித்து தாக்கியது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருமே பீஹாரை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் பெயர் ஜட் குமார் பரேஷ்ராம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதல் தொடர்புடைய தமிழக இளைஞர்கள் சிலரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.