சென்னை ஜன, 30
பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரு உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய இடத்தில் கங்கானா ரணாவத் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்கான ஒத்திகை தொடங்கியதாக ட்வீட் செய்துள்ளார். அதில் கோல்டன் குளோப் விருது பெற்ற கீரவாணி இசையில் பழம்பெரும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதாக நெகிழ்ந்துள்ளார்.