கோவை ஜன, 30
மேட்டூர் அருகே சாலையில் கோவையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் 11 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.