கோவை ஜன, 28
குடியரசு தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கோவை புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம் சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 122 மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். புறநகரில் மொத்தமாக ஒரே நாளில் 42 பேர் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் தடையை மீறி மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 581 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.