கோயம்புத்தூர் ஜன, 31
கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் தமிழ்நாட்டில் இன்றும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை என்றார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து வசதியும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றார்.