சென்னை ஜன, 30
சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் சுமார் 400 ரயில்கள் பயணிக்கின்றன. விரைவு, சரக்கு, மின்சார ரயில் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் பயணிப்பதால் மார்க்கம் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் நடைமேடையை பயன்படுத்தாது தண்டவாளத்தை கடந்து சென்ற 274 பேர் கடந்த ஒரே ஆண்டில் பலியாகியுள்ளனர். இதில் 249 ஆண்களும் 29 பெண்களும் அடக்கம். உயிரிழப்பை தடுக்க விழிப்புணர் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.