புதுச்சேரி ஜன, 27
நாட்டின் 74வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மாநிலங்களில் குடியரசு தின விழாவில் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கம். அதன்படி, தெலங்கானாவில் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை பறக்கவிட்டார். முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் தமிழிசை ராஜ்பவனில் உள்ள தர்பார் அரங்கின் முன் தேசிய கொடியை பறக்கவிட்டார்.