மும்பை ஜன, 26
ஒரே நாளில் அதானியின் சொத்து மதிப்பு ₹7000 கோடி சரிந்துள்ளது. பங்கு விற்பனை மூலம் ₹20,000 கோடி திரட்ட அதானி திட்டமிட்டுள்ள நேரத்தில் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியாகி உள்ளன. வரவு, செலவு கணக்கில் மோசடி வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது என அதானி குடும்ப நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பார்க் ரிசர்வ் எல். எல். சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.