புதுடெல்லி ஜன, 24
பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற அமைப்பு உலகில் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்து முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் முதல் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது கூகுள், நான்காவது மைக்ரோசாப்ட், ஐந்தாவது வால்மார்ட் ஆகியவை உள்ளன.