சென்னை ஜன, 26
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பொது தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை நடத்த உள்ளது. ஜனவரி 30 ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்வு நடத்தப்பட இருக்கும் தேதிகள் கேள்வித்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றன.