சென்னை ஜன, 24
பிரபல இயக்குனரும், நடிகருமான ராமதாஸ் இன்று காலமானார். 1986 ம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் அதிகமாக அறிமுகமான இவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். வசூல்ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.