சென்னை ஜன, 20
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார் உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் அபாய கட்டத்திலிருந்து மீட்டுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் அவருக்கு சில காயங்கள் உள்ளதால் இதற்காக உயர் சிகிச்சை எடுக்க ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது.