அமெரிக்கா ஜன, 20
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக அமெரிக்கா வாழ் இந்தியரான அருணா மில்லர் பதவியேற்றுள்ளார். இந்த மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் பதவியேற்பு விழாவில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து 7 வயதில் அமெரிக்காவிற்கு குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.