கேரளா ஜன, 18
சபரிமலையில் மகர விளக்கு சீசனை ஒட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்நிலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடை அடைக்கப்படுகிறது நடப்பு சீசன் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் தற்போது வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.