சிக்கிம் ஜன, 18
சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அம்மாநில முதல்வர் பிரேம்சிங் தமாக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சிக்கிம் மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.