புதுடெல்லி ஜன, 18
2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட மூன்று சதவீதம் குறைவாகும். கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷ்யா உக்கிரன் போரால் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் மெதுவாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.