புதுடெல்லி ஜன, 19
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பத்தாயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் ஐந்து சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.