Spread the love

அரியலூர் ஜன, 16

திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருகருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. தமிழக அரசின் ஆன்மீக தலங்களின் ஒன்றான பிரசித்தி பெற்ற அடைக்கல அன்னை ஆலயத்தில் நேற்று வேண்டுதல் பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்திருந்த அனைத்து மதத்தினை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

அதன் பின்னர் பெண்கள் 70-க்கும் மேற்பட்ட மண்பானையில் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வழிந்ததை தொடர்ந்து உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தி பொங்கிய பொங்கலை அர்ச்சித்தார். பின்னர் ஆலயத்தில் மாதா சொரூபம் முன்பு பொங்கல் படைக்கப்பட்டு சிறப்பு, ஜெப வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் சமைக்கப்பட்ட பொங்கலை அனைவருக்கும் வேண்டுதல் பொங்கல் வைத்தவர்களால் வினியோகிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *