இலங்கை ஜன, 15
இலங்கையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அந்நாட்டு சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருப்பதுடன் 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இந்தியர்கள் இதை பின்பற்ற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.