அமெரிக்கா ஜன, 15
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஷ் பட்டேல் என்ற மாணவருக்கு கழிவு நீரை குடிநீராக மாற்ற ரூ.9.56 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். உலகின் வறண்ட பகுதிகளின் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க மிகக் குறைந்த செலவில் கடல் மற்றும் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்ற அவரது ஆய்வு உதவும் என தெரிவித்துள்ளார்.