மாலி ஜன, 13
மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மேற்கு முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு வெவ்வேற இடங்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் 14 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.