மதுரை ஜன, 13
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 22ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிகிச்சை நிபுணராக இருந்தார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.