Spread the love

மதுரை ஜன, 12

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரணியன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதாகவும், இது குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த நடனத்திற்கு தடை விதிக்கவேண்டும், இணையதளத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாசமான வீடியோக்களை நீக்கவேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் தமிழகத்தில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *