மதுரை ஜன, 9
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை ஆட்சியர் அனிஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள பாண்டியன் சூப்பர் மார்க்கெட் ரேஷன் கடையில் தொடங்கி வைத்தனர்.
பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் தொகுப்பினை வாங்கிச் சென்றனர்.