அரியலூர் ஜன, 13
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, முன்னாள் அரசு வக்கீல் சாந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.