கரூர் ஜன, 12
கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கரூா் மாவட்ட மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22 ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தாந்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாியில் நடக்கிறது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட உள்ளனர். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவும் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.