ஐதராபாத் ஜன, 10
ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நட்பின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவை சந்தித்தார். இருவருக்கும் நீண்ட கால நட்பு தொடர்ந்து வருகிறது. இதனால் எப்போதும் ஐதராபாத்தில் சந்திரபாபுவை சந்திக்க ரஜினி தவறுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.