புதுச்சேரி ஜன, 9
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை முதல் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
