கிருஷ்ணகிரி ஜன, 9
பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வாகன சோதனை கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் சுங்கச்சாவடி அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓசூரில் இருந்து சரக்கு வேன் ஒன்று, கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த வேனை நிறுத்தி டிரைவரிடம் காவல் துறையினர் விசாரணைநடத்தினர். அப்போது வேனில் இருந்தவர்கள் தேங்காய் நார் மூட்டைகளை கொண்டு வருகிறோம் என கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் வேனின் பின்னால் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் தேங்காய் நார் மூட்டைகளுக்கு இடையே குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் ச இதுதொடர்பாக காவல் துறையினர் டிரைவர் மற்றும் வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.