ஈரோடு ஜன, 7
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பு பணிக்காக காலை 6 மணிக்கு செல்ல வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதில் 13 காவலர்கள் தாமதமாக பணிக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உடனே அவர்களுக்கு இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டு அவர்கள் 13 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் காவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.