புதுச்சேரி ஜன, 7
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இன்று நாம் அனைத்தையும் காணொளி மூலம் காண்கிறோம். வீடியோ கால் மூலம் பேசுகிறோம். ஆனால் அன்றே சிவன் அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி அப்பருக்கு காட்சியளித்துள்ளார். என்று கூறினார். மேலும் இந்து மதத்தில் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஆதாரத்துடன் உள்ளது என தனது கருத்தை தெரிவித்தார்.