அரியலூர் ஜன, 4
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் வழங்கியது போன்று பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.கிருஷ்ணன், பொருளாளர் கே.கண்ணன், துணை தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிற் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.