சூளகிரி ஆகஸ்ட், 11
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் ஒன்றிய 15 வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சின்னாறு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சூளகிரியில் பைப்லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதில் ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.