கேரளா ஜன, 4
கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற அசத்தியுள்ளார். ஜூலி ஏ மேத்யூ என்ற இவர் கேரள மாநிலம் திருவழாவை சேர்ந்த மலையாள பெண்ணாவார். பிலடெல்பியா மாகாணத்தில் வளர்ந்த இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நீதிபதியானார். இந்நிலையில் தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் பெண்ட் கவுண்டில் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.