புதுடெல்லி ஜன, 3
கொரோனா காலத்தில் மத்திய அரசு அன்ன யோஜனா திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் ரேஷனில் 5 கிலோ கோதுமை அல்லது ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்ன யோஜனா திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.