சென்னை ஜன, 2
10 முதல் 12 வரையில் பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 பொது தேர்வுகள் வரும் மார்ச் ஏப்ரலில் நடைபெற உள்ளன. இதற்கு 11ல் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் 12 தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு டிசம்பர் 26 விண்ணப்ப பதிவு தொடங்கியது. இதற்கான கடைசி நாள் நாளையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.