சென்னை ஜன, 2
இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும் எண்ணும், எழுத்தும் பயிற்சி காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி நான்காம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.