சென்னை ஜன, 2
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 360 பேர் மீது மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 22 பேரை கைது செய்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.